பர்வதமலை கிரிவலம்

🔥பர்வதமலை கிரிவலம் பற்றிய சிறிய பதிவு 🔥
 
🔯“பர்வதமலை” தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆதி சிவன் கைலாச மலையிலிருந்து இறங்கி தென்பகுதியில் நுழைந்த போது அவர் முதலில் கால் பதித்தது இங்குதான். அதற்கான தடையங்களாக இறைவனின் பாதங்கள் இங்கு இன்றும் இருக்கின்றன.
 
🔯ஆஞ்சநேயர் தூக்கி வந்த சஞ்சீவியின் மலையின் சில பாகங்கள் இங்கும் விழுந்துள்ளதால் இதற்கு பர்வத சஞ்சீவி மலை என்று பெயர்.
 
🔯கடல் மட்டத்தில் இருந்து 4560 அடி உயரமுள்ள இந்த மலையை ஏறி இறைவனை பார்ப்பது என்பது சிவன் மீது தீரா பற்றும் மற்றும் வைராக்கியம் கொண்டவர்களால் மட்டுமே முடியும்.
 
🔯பர்வதமலை சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம் ஆகும்.
 
🔯திருவண்ணாமலை மாவட்டம் போளூர் To செங்கம் போகும் பாதையில் உள்ளது.
 
🔯 பர்வதமலையில் உள்ள குகையில் விடோபானந்தா சுவாமிகள்சுமார் 14 வருடம் கடும் மௌன தவம் புரிந்தார்.
 
🔯இந்த மலை நந்தி வடிவில் இருப்பதால் நந்தி மலை என்றும், சிங்க டிவில் இருப்பதால் சிங்க மலை என்றும் கூறுவர்.
 
🔯 இங்குள்ள சக்திகளில் மிக முக்கிய மான விஷயம் என்னவென்றால் இந்த இறைவனையும் இறைவியியையும் உருவாக்கி வழிபட்டவர் சித்தர் போகர். இன்றளவும் சித்தர்களும் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் வந்து இங்குள்ள இறைவனையும் இறைவியையும் சூட்சும ரூபத்தில் வழிபடுகின்றனர்.
 
🔯 நந்தியால் சுமக்கப்பட்டுள்ள இறைவனும் இறைவியும் பார்க்கும் அனைவரின் உயிரிலும் கலக்கின்றனர். அதனால்தானோ என்னவோ இந்த கோயிலில் எங்கு திரும்பினாலும் நந்தி சிலைகள்தான் காணப்படுகின்றன.
 
🔯சர்வ தோஷ நிவர்த்தி ஸ்தலம் இது. ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் 1ம் நாள் இங்கு பல்லாயிரக்கணக்கானோர் (சுமார் 1 லட்சத்திற்கும் மேல்) கிரிவலம் வருகின்றனர்.
 
🔯தன்னுடைய தோஷங்கள் நீங்க சிவனை பிரார்த்தித்து கிரிவலம் வந்தால் அத்தனை தோஷங்களும் நீங்குகிறது என்பதால் ஒவ்வொரு வருடமும் கிரிவலம் எண்ணிக்கை கூடிக்கொண்டே வருகிறது.
 
🔯 காஞ்சி மகாபெரியவர் அவர்கள் மலை ஏற வந்தபோது அந்த மலையே சிவனாக காட்சிஅளித்ததால் மலையேறாமல் கிரிவலம் சென்றார்கள்.
 
🔥ஓம் சிவாய நம🔥
 

Leave a Reply