வீட்டில் செல்வம் கொழிக்க

இந்த படத்தை மட்டும் வீட்டில் மாட்டி வைத்தால் எப்பேர்ப்பட்ட தரித்திரமும் நீங்கி செல்வம் கொழிக்கும்! அது என்ன படம் என்று நீங்களும் தெரிஞ்சுக்கணுமா?
 
ஒரு சில விசேஷமான படங்களுக்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும் சக்தி உண்டு. சிலவற்றிற்கு செல்வத்தை ஈர்க்கும் சக்தி உண்டு. அந்த படத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டி வைப்பது அதிர்ஷ்டத்தை மேலும் பெருக்கும். அந்த வகையில் எப்பேர்பட்ட பீடையும், தரித்திரமும் நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு உண்டாக செய்யக்கூடிய இந்த படம் எந்த வகையில் விசேஷமானது?
 
அப்படி அது என்ன படம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.
 
சுக்கிரனின் வாகனமாகவும், சூரியனின் வாகனமாகவும் இருப்பது வெள்ளை குதிரை தான். ஏழு குதிரைகள் பூட்டிய வாகனத்தில் சூரிய பகவானும், வெள்ளை குதிரையில் சுக்கிர பகவானும் அருள் புரிகின்றார்கள். கஜமுக விநாயகருக்கு யானை விசேஷமானது போல வாழ்வில் செல்வம் செழிக்க வெள்ளை குதிரை மிகவும் விசேஷமானது. ஒருமுறை சுக்கிரனுடைய வாகனமாக இருக்கும் வெள்ளை குதிரையை மகாலட்சுமி தேவி தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாராம்.
 
அச்சமயத்தில் ஸ்ரீமன் நாராயணன் பேசிய வார்த்தைகள் எதுவும் மகாலட்சுமி தேவியின் செவிகளுக்கு விழவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மகாவிஷ்ணு மகாலட்சுமியை குதிரையாக போகக் கடவாய் என சபித்து விட்டாராம். இதனால் அழகிய வெள்ளை குதிரையாக பூலோகத்தில் மகாலட்சுமி தேவி பிறந்ததாக புராணங்கள் குறிப்பிடுகிறது. எனவே குதிரையில் மகாலக்ஷ்மி தேவி வாசம் செய்கிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதங்களில் ஒய்யாரமாக வரும் சூரிய பகவான் நமக்கு சுபிட்சத்தை கொடுக்க கூடியவர்.
 
இல்லற வாழ்க்கையில் இனிமை காண சுக்கிரபகவான் அருள் வேண்டும். களத்திர காரனாக விளங்கும் சுக்கிரனுடைய அருளின்றி நல்ல மனைவியும், நல்ல கணவனும் ஒருவருக்கு அமைவது இல்லை. வீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கவும், கன்னிப்பெண்களுக்கு மனதுக்குப் பிடித்த வரன் அமையவும், ஆண்களுக்கு நல்ல மனையாள் அமையவும் சுக்கிர பகவானை வழிபடுவது சிறப்பான பலன்களை கொடுக்கும். அதுபோல அவருடைய வாகனமாக விளங்கும் குதிரை படத்தை வீட்டில் மாட்டி வைப்பது இன்னும் சிறப்பு அம்சமாகும். ஏழு குதிரைகள் கொண்ட படங்கள் அதிர்ஷ்ட படங்களாக கூறப்படுகிறது. அது போல வெள்ளைக்குதிரை படத்தை மட்டுமே மாட்டி வைத்தாலும் அதிர்ஷ்டம் தான். காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நம் உள்ளங்கையை பார்த்து எழுவது வழக்கம்.
 
உள்ளங்கையில் அஷ்டலட்சுமிகளும் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது. ஆகவே உள்ளங்கையை பார்த்துவிட்டு எழுவது அன்றைய நாளை அதிர்ஷ்டமாக மாற்றும். அதன் பிறகு நாம் இந்த ஏழு குதிரைகள் ஓடுவது போன்ற படம் அல்லது வெள்ளைக்குதிரை படத்தை பார்த்துவிட்டு அன்றாட வேலைகளை துவங்கினால் அன்றைய நாள் முழுவதும் வீட்டில் மகிழ்ச்சியும், வியாபாரம், தொழில் போன்றவற்றில் விருத்தியும் உண்டாகும் என்பது ஜோதிட நம்பிக்கை.
 
வீட்டின் வரவேற்பறையில் கிழக்கு, தென்கிழக்கு, வடக்கு ஆகிய திசைகளில் எல்லோருடைய பார்வையும் தெரியும் படியாக குதிரை படத்தை மாட்டி வைப்பது அதிர்ஷ்டத்தை தரும். எப்பொழுதும் ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தை வேட்டையாடுவது போன்ற படத்தை வீட்டில் மாட்டி வைக்க கூடாது. இவை கெட்ட அதிர்வலைகளை உண்டாக்கும்.
 
மகாலட்சுமி தேவியின் படம், வாத்தியக் கருவிகளின் படம், குதிரை படம், கழுதை படம், கோமாதா படம் ஆகியவற்றின் படங்களை வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் காணும்படி மாட்டி வைப்பது எத்தகைய பீடை மற்றும் தரித்திரத்தையும் நீக்கிவிடும்.
 

Leave a Reply