உங்களைச் சுற்றி சற்று உன்னிப்பாக கவனியுங்கள்

நீங்கள் உங்களைச் சுற்றி சற்று உன்னிப்பாகக் கவனியுங்கள்

ஏன் இவ்வளவு பேர் சோர்வாகவும், அலுப்பாகவும், இன்னும் மீதி நாட்களை எப்படி ஓட்ட வேண்டும் என்று விரக்தியாகவும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஏன் இந்த மரங்களைப் போலப் புத்துணர்வுடன் வாழக் கூடாது.

அவர்களுக்கு என்ன நேர்ந்தது.

ஒவ்வொரு மனிதனும் வேறு ஒருவரைப் போலவே இருக்க விரும்புகிறான், முயற்சிக்கிறான் அதனால்தான் இவ்வளவு சோகம், சோர்வு, துன்பம் எல்லாம்.

நீ நீயாக இரு.

உன் தனித்தன்மையை ரசி.

உனக்கு கொடுத்த இந்த உடலை கொண்டாடு, இந்த வாழ்வை ஆனந்தமாக ஏற்றுக் கொள்.

அப்போது உன் தனித்தன்மை பிரகாசிக்கும்.

இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிர்களும் தனித்தன்மை மிக்கவை தான்

-ஓஷோ

Leave a Reply