திருமணம் செய்யலாமா கூடாதா?

ஒரு மனிதன் சாக்ரடீசிடம்
 
நான் இளைஞன், திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். உங்கள் ஆலோசனை என்ன என்றார்?”
 
ஏனென்றால் உங்கள் மணவாழ்க்கைப் பற்றிய கதைகள் பல கேட்டிருக்கிறேன். திருமணம் பற்றி நீங்கள்தான் அதிக அனுபவம் உள்ளவர் என்று கேள்வி பட்டு உள்ளேன். ஆகவே உங்கள் அறிவுரைக்காக வந்திருக்கிறேன்.
 
திருமணம் செய்து கொள்ளவா அல்லது பிரம்மச்சாரியாகவே இருப்பது நல்லதா? எது அதிக ஆனந்தம் தரும்?”என்றான்.
 
சாக்ரடீஸ் சொன்னார்; “நீ திருமணம் செய்து கொள்வது நல்லது”
 
இளைஞன்: “நீங்கள் என்னை குழப்புகிறீர்கள்”
 
அதற்கு சாக்ரடீஸ், இதில் குழப்புவதற்கு ஒன்றுமில்லை, ரொம்ப எளிது.
 
எனக்கு கிடைத்தாற்போல ஒரு பெண் உனக்கு கிடைத்தால் நீ பெரிய தத்துவ ஞானியாகி விடுவாய்.
 
நான் அப்படி ஆக வேண்டியதாயிற்று. இது வெறும் அத்தியாவசியத் தேவை! நான் அமைதியாக இருக்கிறேன், தியான நிலையில் மௌனமாகி விட்டேன். இது எனக்குப் பெரிதும் உதவியது.
 
உனக்கு ஒரு நல்ல மனைவி கிடைத்தால் நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். மோசமான மனைவி கிடைத்தால் ஞானியாகிவிடுவாய்.
 
எவ்வழியானாலும் உனக்கு லாபம்தான். கல்யாணம் கட்டிகொள்!” என்றார்.
 
-ஓஷோ
 
Credit: Jore Buddhan

Leave a Reply