கிரகங்கள் வலுத்தால்

சூரியன் வலுத்தால் அதிகாரம், ஆணவம் உண்டு. ஆனால் பிறந்த ஆண் குழந்தை பற்றிய சிறிய கவலை இருக்கும்.
 
சந்திரன் வலுத்தால் மனோபலம் உண்டு. ஆனால் அடிக்கடி இடமாற்றம் உண்டு.
 
சுக்ரன் வலுத்தால் மனைவி அழகாக இருப்பாள், வசதியாக இருப்பாள். ஆனால் சிறுநீரக மற்றும் நீரிழிவு மருத்துவ செலவும் உண்டு.
 
சனி வலுத்தால் நல்ல ஆயுள் உண்டு. ஆனால் வியாதியோ அல்லது வழக்கு உண்டு.
 
செவ்வாய் வலுத்தால் சொத்து உண்டு, தைரியம் உண்டு. ஆனால் அடிக்கடி சிறு விபத்து உண்டு.
 
புதன் வலுத்தால் அறிவு உண்டு. ஆனால் எப்போதும் கடன் உண்டு.
 
குரு வலுத்தால் குழந்தைக்கு பஞ்சமில்லை, ஆனால் பணம் சம்பந்தப்பட்ட அவப்பெயர் உண்டு.
 
இப்படி ஒரு கிரகம் ஒன்றை கொடுத்து, ஒன்றை பிடுங்கும்.
 
கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெறுவதை விட சம பலன்களை பெற்று இருப்பதும், ராகு/கேது இருவரும் தனித்து நிற்பதும் நல்ல வகையில் வாழ்க்கை நகரும்.
 

Leave a Reply