ராகுவின் ஆசை

ராகு இவர் ஒரு நிழல் கிரகம், பச்சோந்தி கிரகம் என்றனர் நம் முன்னோர்கள், காரணம் இவர் சேரும் இடங்களில் சேர்ந்த இடத்தின் அதிபதியை போல பிரதிபலிப்பார். அப்படி என்றால் இவருக்கு என்று எந்த காரகமும் கிடையாதா என்று கேள்வி எழும், ஏன் இல்லை எங்கெல்லாம் ஈர்ப்பு செயல்படுகிறதோ அங்கெல்லாம் பற்று எனும் ரூபத்தில் ராகு செயல்படுவார், அப்படி எனில் ராகுவின் காரகம் பற்று எனும் ஆசை மட்டுமே. இவர் 7 கிரகங்களிலும் பிரதிபலிப்பார், ராகு ஒரு கிரகத்தை ஒரே வீட்டில் அல்லது கோணத்தில் இணைவதின் வழியே ஆக்கிரமிப்பார். தன்னுடைய கட்டுபாட்டில் அந்த கிரகத்தை கொண்டுவருவார், சரி ராகுவின் காரகம் மற்ற 7 கிரகங்களுடன் சுருக்கமாக பார்க்கலாம்.
 
சூரியன்+ராகு:
ஆளுமை ஆசை, அடுத்தவரை தண்டிக்க ஆசை, சுயமரியாதை ஆசை.
 
சந்திரன்+ராகு:
கண்களால் ரகசியங்களை ரசிக்க ஆசை, தாயின் பாசத்தை தான் மட்டுமே பெறவேண்டும் என்கிற ஆசை, சோற்றின் மீது ஆசை, சுகத்தின் மீது ஆசை.
 
செவ்வாய்+ராகு:
செயல்களில் முன்னிலை பெற ஆசை, மற்றவரை அடக்கிவைக்க ஆசை, கோபத்தால் தன்னை உயர்த்திக்கொள்ள ஆசை.
 
புதன்+ராகு:
அதிகம் பேச ஆசை, சிந்திக்க ஆசை, எழுத ஆசை, படிக்க ஆசை, கற்றுக்கொள்ள ஆசை.
 
குரு+ராகு:
அடுத்தவருக்கு போதனை செய்ய ஆசை, தன்னுடைய ஆன்மீகம் பெரிதேன காட்டிக்கொள்ள ஆசை, பயணங்களில் ஆசை, அடுத்தவர் செல்வத்தின் மீது ஆசை.
 
சுக்கிரன்+ராகு:
நிறைய பொருள் சேர்க்க ஆசை, மோகம், காமம், சதைபற்று போன்ற ஆசைகள், மற்றவரிடம் தனது வசதியை வெளிபடுத்திகொள்ள ஆசை, ஆடம்பர ஆசை, மாற்றான் துணையின் மீது ஆசை.
 
சனி+ராகு:
கீழ்நிலையில் உள்ளவருடன் பழகும் ஆசை, கீழ்நிலை செயல்களில் ஆசை, மற்றவர் பொருளின் மீது ஆசை, அடுத்தவரை துன்புறுத்தி ரசிக்க ஆசை, முறைதவறிய காமம்.
 
பதிவில் கூறியபடி ராகுவின் ஆசைக்கு அளவு என்பதேது அது வளர்ந்துகொண்டே தான் செல்லும்….
 

Leave a Reply