ராகுவுக்கு வாழ்வியல் பரிகாரம்

ராகுவுக்கு பரிகாரம் எளிமையாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், ஆசையை துறந்துவிடுங்கள். அதாவது உங்கள் லக்ன/ராசிக்கு ராகு நின்ற வீட்டின் காரகம் மற்றும் தன்மையை பொறுத்து அந்த தன்மை குறிக்கும் காரக ஆசையை துறந்துவிடுங்கள் இதுவே வாழ்வியல் பரிகாரமாகும்.
 
உதாரணமாக:
 
மேஷ லக்னம் ரிஷபத்தில் 2 ல் ராகு நின்றால், ரிஷப ராசி அர்த்த (பொருள்) வீடாகும், இவர்கள் முகத்தில் எந்த ஆபரணங்களும் அணிய கூடாது, முக அழகுக்கு அழகு சாதன பொருள்கள் உபயோகம் செய்ய கூடாது, பேச்சில் பொருளாசையை வெளிபடுத்தகூடாது. இவர்களது குடும்பம் எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டும். ஈட்டும் தனத்தில் அதிக பொருள்கள் வாங்க கூடாது. இப்படி ராகு நின்ற வீடு குறிக்கும் காரகம் மற்றும் தன்மைக்கு ஏற்ப ஆசைகளை துறந்தால் ராகுவால் இன்னல்கள் வராமல் தப்பலாம்.
 
வீடுகள் அதன் குணம் மற்றும் விட வேண்டிய ஆசைகளை கீழே கொடுக்கிறேன் பதிவை நன்றாக படியுங்கள்.  பதிவுடன் உங்கள் ஜாதகத்தை ஒப்பிட்டு நீங்களே பலன் காணலாம். இதைவிட எளிமையாக விளக்க எனக்கு தெரியவில்லை.
 
தர்ம வீடுகள் (தானம், தர்மம்):
மேஷம், சிம்மம், தனுசு. உயிர் மற்றும் பொருள் காரகங்களில் தர்ம சிந்தனையுடன், தர்ம நெறி தவறாமல் செயல்பட வேண்டும்.
 
அர்த்த வீடுகள் (பொருள்):
ரிஷபம், கன்னி, மகரம்: பொருளாசையை துறக்க வேண்டும்.
 
காம வீடுகள் (ஆசை):
மிதுனம், துலாம், கும்பம்: உயிர் மற்றும் பொருள் காரகங்களில் ஆசையே வைக்க கூடாது, கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் இன்னும் சந்தோஷம் என்றிருக்க வேண்டும்.
 
மோட்ச வீடுகள் (சேவை):
கடகம், விருச்சிகம், மீனம்: உயிர் காரகங்கள் எவ்வளவு கடுமையாக நடந்து கொண்டாலும், எவ்வளவு சோதனைகள் வந்தாலும் அவர்களுக்கு சேவை செய்ய வேண்டும். பொருள் காரகங்களை பகிர்ந்து கொடுக்க வேண்டும். பொது நலனில் அக்கறை செலுத்த வேண்டும்.
 

Leave a Reply