12 பாவங்களில் கேது நின்ற பலன்

பொதுவாக கேது நின்ற பாவத்தின் உயிர்/பொருள் காரகங்கள் இரண்டிலும் தனது கதிர்வீச்சை பிரயோகித்து அவரவர் கர்மத்தின் படி அந்த காரக பலன்களின் தடை/தாமதம்/விரக்தி போன்றவற்றை ஏற்படுத்துவார், இதனை ஒருவர் செயற்கையாக தனக்கு தானே பலனாக உருவாக்கிக்கொண்டால் கேதுவின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ள இயலும், அதனை சுருக்கமாக 12 பாவங்களுக்கும் கொடுக்கிறேன், முயற்சி செய்துதான் பாருங்களேன்.
லக்ன கேது: அடிக்கடி முகமுடி அணிந்து கொள்ளுங்கள், குறைந்தது 24 நிமிடங்கள் அணிய வேண்டும், இதனை ஏன் அணிக்கிறீர்கள் என்பதை யாரிடமும் கூறக்கூடாது என்பது மிக முக்கிய விதி.
2ல் கேது: தினமும் வரும் யமகண்டத்தில் பேசாமல் மௌனம் சாதியுங்கள், இதனை தினமும் மேற்கொள்ள இயலவில்லை என்றாலும் அடிக்கடி செய்துவாறுங்கள்.
3ல் கேது: தேவையே இல்லாத உதவாத விஷயங்களை திடீர் என்று ஆய்வு செய்யுங்கள், இவ்விதம் ஆய்வு செய்யும்பொழுது வேறு எந்த செயலையும் செய்ய கூடாது அதனை மட்டுமே செய்ய வேண்டும், குறைந்தது உங்கள் ஆய்வு 24 நிமிடங்கள் நீடிக்க வேண்டும், ஆய்வு செய்துவிட்டு பின்னர் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட வேண்டும், அது எவ்வளவு பயனுள்ளது என்றாலும் உங்கள் வாழ்க்கையில் பயன்படுத்த கூடாது என்பது முக்கிய விதி.
 
4ல் கேது: நீங்கள் வசிக்கும் வீட்டுக்கு வெளியே ஒரு வழிபோக்கனை போல அடிக்கடி நின்று உங்கள் இல்லத்தை பார்வையிடுங்கள், பார்ப்பவருக்கு உங்கள் வீட்டுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாததை போல இருக்க வேண்டும், இதனை அடிக்கடி குறைந்தது 24 நிமிடம் செய்துவர வேண்டும்.
5ல் கேது: பூர்வீகத்தில் வசிப்பவர் என்றால் அடிக்கடி உங்கள் பூர்வீக இடத்தை விட்டு வெளியில் அவசியமே இல்லாமல் தங்க வேண்டும், குறைந்தது 1 நாளாவது தங்க வேண்டும், உங்கள் குல தெய்வ கோயிலுக்கு திட்டமிடாமல் அடிக்கடி நடைபயணம் மேற்கொள்ளுங்கள்.
6ல் கேது: நீங்கள் பணி செய்யும் இடத்தில் மாதம் ஒருமுறை உங்களுடன் பணிபுரிப்பவர்களுக்கு மத்திய உணவு வாங்கிக்கொடுங்கள், அசைவம் கூடாது.
7ல் கேது: உங்கள் வாழ்க்கை துணையிடம் திடீர் என்று பற்றுதலே இல்லாமல் நடந்துகொள்ளுங்கள் இது குறைந்தது 1 நாளாவது நீடிக்க வேண்டும்.
8ல் கேது: உங்கள் வருமானத்தில் குறைந்தது 2 சதவிகிதம் சிறை, அவமானம், வாழ்க்கையை தொலைத்தவர்கள், மனநலம் குன்றியவர்களுக்கு உதவுங்கள் இந்த உதவி உள்ளதால் முழுதாக செய்ய வேண்டும், முக்கியமான விதி இதனை உங்கள் குடும்பத்தாரிடமோ மற்றவர்களிடமோ கூறக்கூடாது எக்காரணம் கொண்டும் வெளிப்படுத்த கூடாது.
9ல் கேது: ஆன்மீக பயணம் மேற்கொள்பவருக்கு பயண கட்டணத்தை முழுதாக ஏற்றுக்கொள்ளுங்கள், இதனை உங்கள் சேமிப்பில் இருந்தே செலவழிக்க வேண்டும், சேமிப்பே இல்லை என்றால் இதற்காக சேமிக்க ஆரம்பியுங்கள்.
10ல் கேது: ரோட்டை கூட்டி சுத்தம் செய்யும் நபருக்கு உணவு வாங்கிக்கொடுங்கள், இதனை பெரும்பாலும் அவரை அருகில் உள்ள உணவகத்துக்கு கூட்டி சென்று அவர் விரும்புவதை மட்டுமே வாங்கிக்கொடுப்பது அதி உத்தமம், சுடுகாட்டில் இருக்கும் வெட்டியான் அல்லது வேலை செய்பவருக்கும் உணவு வாங்கி கொடுக்கலாம்.
11ல் கேது: வாழ்க்கை துணைக்கு பணிவிடை செய்யுங்கள், வாழ்க்கை துணையின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள், வேலை/தொழிலில் உடன் பணிபுரிபவருக்கு உதவுங்கள்.
12ல் கேது: தூங்கும் பொழுது வெறும் தரையில் தலையணை கூட இல்லாமல் குறைந்தது 24 நிமிடங்கள் தூங்க வேண்டும், தாம்பத்திய உறவு கொள்ளும் பொழுது குறைந்த பட்சம் பாய் அல்லது பெட்சீட் சேர்த்துக்கொள்ளலாம், படுக்கையை தவிர்க்க வேண்டும், இதனை முடிந்தவரை அடிக்கடி செய்துவாறுங்கள்.
குறிப்பு: பதிவில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் எதார்த்தமானதும், சற்று கடினமானதும் ஆகும், மேலும் இதனை மேற்கொள்ளும் பொழுது காரணம் மிக ரகசியமாக இருக்க வேண்டும் எதற்காக இதனை செய்கிறீர்கள் என்பதை கூடியவரை யாரிடமும் வெளிப்படுத்த கூடாது, அப்பொழுதே பலன் முழுதாக கிடைக்கும், கேதுவுடன் கிரகங்கள் ஒரே வீட்டில் இணையும் பொழுது அதற்கு ஏற்ற மாதிரி சில வழிமுறைகளை மாற்றி கையாள வேண்டும், ஜனன ஜாதகத்தை பொறுத்து இந்த வழிமுறைகள் மாறுபடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
 

Leave a Reply