அகத்தியர் அருள்வாக்கு 3

அகத்திய மாமுனிவர் என்பவர் யார்?

அதங்காட்டேசன் குரு அகத்திய மாமுனிவர்.

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஒரு மகானின் வழிகாட்டுதல் இருந்தாலும், ஏன்? ஆண்டவனே அருகில் இருந்தாலும் விதி தன் கடமையை செய்துகொண்டே இருக்கும். விதி தன் கடமையை செய்துகொண்டே இருக்கட்டும். மனிதன், தன் கடமையை, மனம் சோர்ந்துவிடாமல் செய்துகொண்டே இருந்திட வேண்டும். கடமை என்றால் வெறும் லோகாய கடமை மட்டுமல்ல.

பாவ, புண்ணியம் என்ற கர்மக்கணக்கிலே பாவக்கணக்கு அதிகமாக பெற்றதனால் குழப்பமும், தெளிவுமாக வாழக்கூடிய நிலைமை கொண்ட மனிதர்கள் பாவங்களை குறைக்க எல்லா வழிகளையும் அன்றாடம் முயற்சி செய்திட வேண்டும். அஃது பிணியாக வாட்டி குறையலாம்.

Leave a Reply