பலராம் ஜெயந்தி

 1. வசுதேவ மன்னருக்கு மிக முக்கியமான இரு மனைவியர் தேவகி மற்றும் ரோகிணி.
 1. தேவகியை வசுதேவர் திருமணம்செய்த போது அவர்கள் இருவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை தாய் மாமனான கம்சனை கொல்லும் என்று ஒரு அசரீரி ஒலித்தது.
 1. இதை கேட்டு ஆத்திரம் அடைந்த கம்சன் தனது சகோதரி தேவகியையும் கணவர் வசுதேவரையும் சிறையில் அடைத்தான்.
 1. வசுதேவர் தனக்கு பிறந்த குழந்தைகளை எல்லாம் கொண்டு போய் கம்சனிடம் கொடுத்தார். கம்சன் அக்குழந்தைகளை எல்லாம் கொன்றான். இவ்வாறு கம்சன் ஆறு குழந்தைகளையும் ஈவிரக்கமின்றி கொன்றான்.
 1. தேவகி ஏழாவதாக கர்ப்பம் தரித்தாள். அந்த கர்பமானது கிருஷ்ணரின் மாயாசக்தியால் வசுதேவரின் இன்னொரு மனைவியான ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றப்பட்டது.
 1. ரோகிணி கோகுலத்தில் நந்தமகாராஜ் மற்றும் யசோதையின் பாதுகாப்பில் இருந்தாள். அவள் ஆவணி மாதம் பௌர்ணமி தினத்தில் பலராமரை ஈன்று எடுத்தாள்.
 1. பலராமர் பகவான் கிருஷ்ணரின் முதல் விரிவங்கமாவார். அவரே ஆதிசேசன் அவரே சங்கர்சனர். கிருஷ்ணரின் எல்லா அவதாரங்களும் இவரில் இருந்தே தோன்றுகிறது. அண்ட சாராசரம் அனைத்தையும் ஆதிசேசனே தாங்குகிறார்.
 1. ஆதிசேசனே பகவான் நாராயணனுக்கு பள்ளி கொள்வதற்கு மெத்தையாகவும் இருப்பதற்கு ஆசனமாகவும் நடக்கும் போது குடையாகவும் இருந்து சேவை புரிகின்றார். அதனால் அவர் ஆதிகுரு என்று அழைக்கப்படுகிறார்.
 1. பலராமருக்கு இரண்டு மனைவியர் ரேவதி மற்றும் வருணி.
 1. திரேதா யுகத்தில் கிருஷ்ணர் ராமராக அவதரித்த போது அவரது சகோதரன் லட்சுமணனாக பலராமர் அவதரித்தார்.
 1. இலட்சுமணனின் சேவையில் மனம் நெகிழ்ந்து போன ராமபிரான் அடுத்த பிறவியில் தனக்கு அண்ணனாக வர வேண்டும். அவருக்கு நான் சேவைகள் செய்ய வேண்டும் என்று எண்ணங்கொண்டார்.
 1. துவாபரயுகத்தில் பகவான் கிருஷ்ணராக அவதரித்தார். பலராமர் தமையனாக அவதரிக்க கிருஷ்ணர் தனது அண்ணக்கு பணிவுடனும் அடக்கத்துடனும் சேவைகள் புரிந்து தனது விருப்பத்தை நிறை வேற்றினார்.
 1. திரேதா யுகத்தில் இருவரும் இராம இலட்சுமணராகவும் துவாபர யுகத்தில் கிருஷ்ண பலராமராகவும் அவதரித்த இவர்கள் தான் கலியுகத்தில் சைத்தன்யராகவும் நித்தியானந்தராகவும் அவதரித்தனர்.
 1. கௌட தேசம் என்று சொல்லப்படுகிற மேற்கு வங்காளத்தில் இருவரும் கலியுக அவதாரமாக அவதரித்தனர். சைத்தன்யர் நவதூவீபத்திலும் நித்தியானந்தர் ஏகசக்ராவிலும் தோன்றினர்.
 1. அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட இராமருக்கு உறுதுணையாக இருந்தார் லட்சுமணன்.
 1. துவாபரயுகத்தில் பக்தர்களை காத்து துஷ்டர்களை அழித்தார்கள் கிருஷ்ணரும் பலராமரும்.
 1. கலியுகத்திலே இருவரும் நித்தாய் கௌரங்கராக 500 ஆண்டுகளுக்கு முன் அவதரித்து கிருஷ்ண பிரேமையை கொடுத்து எல்லோர் மனங்களிலும் துஷ்ட குணம் என்னும் அரக்கனை அழித்தனர்.
 1. சைத்தன்யர் மற்றும் நித்தியானந்தர் கருணாவதாரம். அவர்கள் வீழ்ச்சி அடைந்த ஆத்மாக்களை விடுவிப்பதற்காக பூவுலகில் மானிடராக தோன்றி “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மகா மந்திரத்தை வாரி வழங்கினர்.
 1. பல சிறப்புகளை கொண்ட பலராமர் இந்தியாவில் ஒரிசா மானிலத்தில் பூரியில் தனது சகோதரி சுபத்திரையுடனும் தம்பி கிருஷ்ணருடனும் பக்தர்களுக்கு கருணை என்னும் கடைக்கண் பார்வையால் ஆசி வழங்குகின்றனர்.
 1. ஆயிரம் வருடங்களுக்கு முன் பலராமரே ராமானுஜராக அவதரித்து ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தை ஸ்தாபித்தார்.

Credit: ஸ்ரீ மஹா பக்த விஜயம்

Leave a Reply