ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டகம்

🌹 அஷ்டகம் என்றால் எட்டு ஸ்லோகத்தால் பரந்தாமானை வணங்குதல் ஆகும். ஸ்ரீ கிருஷ்ணா அஷ்டகம் எட்டு ஸ்லோகங்களை பற்றி விளக்கும் எளிய தொகுப்பு🌺🌹
 
🌺எவன் ஒருவன் எட்டு சுலோகங்களைப் பற்றி அனுதினமும் எண்ணுகிறானோ, அவன் கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும்.
 
🌺நினைத்துப் பார்க்க முடியாத நல்ல பலன்களை எல்லாம் கொடுக்கக் கூடியது இந்த கிருஷ்ணாஷ்டகம்‘ என்பதை இதன் கடைசி ஸ்லோகமான பலஸ்ருதி சொல்கிறது.
 
🌺தினம் தினம், தமிழ்ப் பொருளோடு இந்த அஷ்டகத்தைச் சொல்லி சகல பலன்களையும் பெறுவோம்!
 
🌺 1. வசுதேவ ஸூதம் தேவம் கம்ஸ சாணூர மர்த்தனம் தேவகீ பரமானந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்: வசுதேவரின் குமாரன்; கம்சன் சாணூரன் உள்ளிட்டவர்களைக் கொன்றவன்; தேவகியின் பரம ஆனந்த ஸ்வரூபியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
 
🌺 2. அதஸீ புஷ்ப ஸங்காசம், ஹாரநூபுர சோபிதம் ரத்ன கங்கண கேயூரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்: காயாம்பூ வண்ணத்தைப் போன்றவன்; மாலை, தண்டை, சலங்கை இவற்றால் அழகாகத் திகழ்பவன்; ரத்தினம் இழைத்த கைவளைகள் தோள் அணிகள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
 
🌺 3. குடிலாலக ஸம்யுக்தம் பூர்ண சந்த்ர நிபானனம் விலஸத் குண்டல தரம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்: சுருட்டைத் தலைமுடியுடன் கூடிய அழகு பொருந்தியவன்; முழு நிலவு போன்ற அழகு முகம் கொண்டவன்; பளீர் என ஒளி விடும் குண்டலங்கள் அணிந்தவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
 
🌺 4. மந்தார கந்த ஸம்யுக்தம் சாருஹாஸம் சதுர்ப்புஜம் பர்ஹிபிஞ்சாவ சூடாங்கம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்: மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவன்; அழகான புன்னகை கொண்டவன்; நான்கு கைகள் உடையவன்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
 
🌺 5. உத்புல்ல பத்ம பத்ராக்ஷம் நீல ஜீமூத ஸந்நிபம் யாதவானாம் சிரோ ரத்னம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்:  மலர்ந்த தாமரை இதழ் போன்ற கண்களை உடையவன்; நீருண்ட மேகத்தைப் போன்றவன்; யாதவர்களின் ரத்னமாக முடிசூடா மன்னனாகத் திகழ்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
 
🌺 6. ருக்மிணீ கேளீ ஸம்யுக்தம் பீதாம்பர ஸூசோபிதம் அவாப்த துளசீ கந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்: ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவன்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவன்; துளசியின் பரிமளத்தை உடையவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
 
🌺 7. கோபிகாநாம் குசத்வந்த்வ குங்குமாங்கித வக்ஷஸம் ஸ்ரீநிகேதம் மஹேஷ்வாஸம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்: கோபிகை கொங்கைகளின் குங்குமக்குழம்பு அடையாளத்தை மார்பில் கொண்டவன்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவன். மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவன்; உலகுக்கு குருவாகத் திகழும் கிருஷ்ணனை வணங்குகிறேன்.
 
🌺 8. ஸ்ரீவத்ஸாங்கம் மஹோரஸ்கம் வநமாலா விராஜிதம் சங்க சக்ரதரம் தேவம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும்
 
பொருள்: ஸ்ரீவத்ஸம் எனும் மறுவை அடையாளமாகக் கொண்டவன்; அகன்ற மார்பை உடையவன்; வனமாலை சூடியிருப்பவன்; சங்கு சக்கரங்களைத் தரித்திருப்பவன்; உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை வணங்குகிறேன்.
 
🌺🌹 க்ருஷ்ணாஷ்டகம் இதம் புண்யம் ப்ராதருத்தாய ய படேத் கோடி ஜந்ம க்ருதம் பாபம் ஸ்மரணேன விநச்யதி
 
பொருள்: எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும்.
 
🌺அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்!.🌺🌺
 
💐🌹 சர்வம் கிருஷ்ணார்ப்பணம் 🏵️💐🌹
 
Credit: Selva Raj  🙏

Leave a Reply