சுக்கிரன் + செவ்வாய் சேர்க்கை

சுக்கிரன் + செவ்வாய் சேர்க்கை சமீபகாலமாக அதிக விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது

இது ஏதோ ஆகாத ஒரு கிரக சேர்க்கை என பயம். முதலில சுக்ரனை பற்றி தெரிந்து கொள்வோம்.

சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்தில்

🌷மனைவி

🌷தாம்பத்திய சுகம்

🌷சுகபோகங்களில் விருப்பம்

🌷ஆடம்பரத்தில் விருப்பம்

🌷கலைகளில் ஈடுபாடு

🌷இசை நடிப்பு ஆகியவற்றுக்கு காரகத்துவம்

செவ்வாய்

செவ்வாய் ஒரு தீவிர தன்மையுள்ள கிரகம்

செவ்வாய் ஜாதகத்தில் எந்த பாவத்தில் உள்ளதோ எந்த கிரகத்துடன் இணைந்து உள்ளதோ அந்த கிரகம் மற்றும் பாவம் தொடர்பாக ஜாதகருக்கு ஈடுபாடு அதிகமாக இருக்கும்

அதனாலேயே சுக்கிரன் செவ்வாய் சேர்க்கை அனைவரது மனதிலும் ஒரு வித பயத்தை உண்டாக்கியது

(இருவருக்கும் சுக்கிரன் செவ்வாய் இயற்கை இருந்தால் ஒருவரது தேவையை மற்றவர் பூர்த்தி செய்து விடுவார் பயப்படத் தேவையில்லை)

பொதுவாக எந்த ஒரு கிரக சேர்க்கையும் இரண்டு கிரகங்கள் தங்களுக்குள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதனை பொருத்தே பலன் தரும்

உதாரணமாக துலாத்தில் ஒரு பாகையில் உள்ள சுக்கிரனுக்கு அதே ராசியில் 25 பாகையில் இருக்கும் ச செவ்வாயின் தாக்கம் குறைவு தான்

இதுபோக அந்த கிரகங்கள் உங்கள் ஜாதகத்தில் எந்த பாவத்திற்கு காரகத்துவம் என்பதையும் கவனித்து பலன் அறிய வேண்டும்

இந்த கிரக சேர்க்கை இருக்கும் ராசி மற்றும் பாவத்தை பொறுத்து பலனை மாறுபடும்

சுக்கிரன் செவ்வாய் தொடர்புடைய ராசிகளை பொருத்து ஒருவருக்கு

🌷இசையில் கலைத்துறையில் அதிகப்படியான விருப்பத்தை தருகிறது

🌷நல்ல நிர்வாகத் திறமையை தருகிறது

🌷தனது அழகில் அக்கறை கொள்ளச் செய்கிறது

🌷ஆடம்பரத்தில் விருப்பம் கொள்ளச் செய்கிறது

🌷 கடகம், சிம்மம், மகர, கும்ப லக்னத்தை பொறுத்தவரை இது யோக அதிபதிகளின் சேர்க்கை நல்ல பலன்களைதருகிறது.

Keywords: Sukran Sevvai Serkai, Pirugu Nandhi Naadi, Kiraga Serkai, சுக்கிரன் + செவ்வாய்,  

Leave a Reply